Sunday, October 14, 2012

ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு


சேலம் , கருங்கல்பட்டி 
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்

ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு 

          நவராத்திரி பெருவிழா தேவாங்கரின் புனித விழாக்களுள் ஒன்று. இவ்விழாவினை சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவது நம் கடமை. இப்புனித விழா நிகழும் நந்தன வருடம் புரட்டாசி மாதம் 29ம் நாள் முதல் ஐப்பசி 8ம் நாள் வரை ( 15-10-2012 திங்கள் மஹாளய அமாவாசை முதல் 24-10-2012 புதன் விஜய தசமி வரை ) சீரோடும் சிறப்போடும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும் . 

நிகழ்ச்சி நிரல் 
        திருக்கோவில் வளாகத்தில் நடைபெறும் இப்பெருவிழாவின் பத்து நாட்களிலும் தினசரி காலை - 9.00 மணிக்குமேல் 10-00 மணிக்குள் தேவ தேவிக்கே உரிய வேத மந்திரங்களுடன் கும்கும அர்ச்சனையும் அனைத்து நாட்களிலும் மாலை 7-00 மணிக்கு சிறப்பு அலங்காரங்களுடன் பதினாறு உபசாரங்களுடன் மஹா நெய்வேத்திய பூஜை நடைபெறும்.
     தினசரி இரவு 8-30 மணிக்குப் பக்தர்களுக்கு அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியின் அருள் பொங்கும் பிரசாதம் வழங்கப்படும் .

    நவராத்திரி நிறைவு நாளான விஜய தசமி ஐப்பசி 8ம் நாள் ( 24-10-2012) புதன் கிழமை காலை 6-00 மணி முதல் நவாக்ஷரீ மந்திர ஜபத்துடன் கூடிய ஹோமம் ( யாகம் ) நடைபெறும்.

    அன்று மாலை 3-00 மணிக்கு ஸ்ரீ சௌடேஸ்வரி அலங்காரத்துடன் திருவீதி உலா வந்து ஜம்பு சேர்வை என்னும் அரக்க வதம் நடைபெறும். வன்னி மரத்தின் மீது அம்பிடும் நிகழ்ச்சி நடைபெறும். இடம் : திருக்கோவில் எதிர்புறம். இரவு 8-00 மணிக்கு மஹாநெய்வேத்திய தளிகை பூஜை நடைபெறும்.

  நவராத்திரியின் 5ம் நாள் ஐப்பசி 3ம் நாள் (19-10-2012) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4-00 மணிக்கு திருக்கோவில் வளாகத்தினுள் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி சகஸ்ர நாம அர்ச்சனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெறும்.


தினசரி நிகழ்ச்சி :

முதல் நாள் : புரட்டாசி 29ம் நாள் 15-10-2012 திங்கட்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டி . சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி.

இரண்டாம் நாள் : புரட்டாசி 30ம் நாள் 16-10-2012 செவ்வாய்க்கிழமை  காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு. பத்திரம் R.K. சேகர் – மஹாலட்சுமி குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ காசி விசாலாட்சி .

மூன்றாம் நாள் : ஐப்பசி 1ம் நாள் 17-10-2012 புதன்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு.இரா.சந்திரன் Ex. M.C., ஜெயலக்ஷ்மி. C.பத்மநாபன்-மல்லிகா குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ காஞ்சி காமாட்சி.

நான்காம் நாள் : ஐப்பசி 2ம் நாள் 18-10-2012 வியாழக்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு. நாமக்கல்னேறு S.நாகராஜன்-காயத்திரி குடும்பத்தினர் சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ மதுரை மீனாட்சி.

ஐந்தாம் நாள் : ஐப்பசி 3ம் நாள் 19-10-2012 வெள்ளிக்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திருமதி.ஜெயலக்ஷ்மி அரப்புளி செட்டியார். திரு.அரப்புளி தனசேகரன்-சந்திரகலா குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ தான்ய லக்ஷ்மி.
( பிற்பகல் 4-00 மணிக்கு திருவிளக்கு பூஜை )

ஆறாம் நாள் : ஐப்பசி 4ம் நாள் 20-10-2012 சனிக்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – ராஜ ராஜேஸ்வரி வெங்கடேசன். S.வெங்கடேசன்-புஷ்பா குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ கஜ லக்ஷ்மி.

ஏழாம் நாள் : ஐப்பசி 5ம் நாள் 21-10-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு.சமையல் S.மாதேஸ்-ராஜம்மாள் குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ ஆதி லட்சுமி.

எட்டாம் நாள் : ஐப்பசி 6ம் நாள் 22-10-2012 திங்கட்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு.R.சீனிவாசன்-R.மோகனப்பிரியா குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ வேத மாதா பஞ்சமுக திரிபாதா காயத்திரி.

ஒன்பதாம் நாள் : ஐப்பசி 7ம் நாள் 23-10-2012 செவ்வாய்க்கிழமை காலை 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. கட்டளைதாரர் – திரு.பத்திரம்.N.பெருமாள்-லக்ஷ்மி பிரபா குடும்பத்தினர். சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ மஹா சரஸ்வதி.

பத்தாம் நாள் : ஐப்பசி 8ம் நாள் 24-10-2012 புதான்கிழமை காலை 6-00 மணிக்கு மேல் நவாக்ஷரீ மந்திர ஜபம்-யாகம் மஹா பூர்ணாஹூதி.
 9-00 to  10-00 கும்கும அர்ச்சனை. 10-00 மணிக்குமேல் மஹா அபிஷேகம். மாலை 3-00 மணிக்குமேல் ஸ்ரீ சௌடேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் திருவீதி உலாவுடன் ஜம்பு சேர்வை உற்சவம் நடைபெறும். இரவு 8-00 மணிக்குமேல்அன்னையை சாந்த சொரூபிணி ஆக்கியதாஸ்தானம் எழுந்தருளவித்தல். இரவு 9-00 மணிக்குமேல் மஹா தளிகை பூஜை, தீபாராதனை.  கட்டளைதாரர் – வணக்கத்திற்குரிய மேயர். திரு.S.சவுண்டப்பன். இந்திரா டையிங் திரு.C.சவுண்டப்ப செட்டியார்-தனலட்சுமி குடும்பத்தினர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இராகுகால துர்க்கை வழிபட்டு மகளிர் குழுவினர், திருக்கோவில் நிர்வாக குழு. சிறப்பு அலங்காரம் – ஸ்ரீ விஜய லக்ஷ்மி.

இங்ஙனம்
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாககுழு,
கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டி.



No comments:

Post a Comment