" ஸ்ரீ சாமுண்டி வீரகுமாரர்கள் சேவை குழு"
" ஸ்ரீ சாமுண்டி அழைப்பு வெள்ளி முகப்பு உபயம் "
" அரிது அரிது மானிடராதல் அரிது " எனும் ஔவையின் முதுமொழிக்கு ஏற்ப மானிடராய் பிறத்தல் சிறப்பு என்பர். அதனினும் ஒரு படி மேலாக " தேவாங்கராய் " பிறத்தல் பாலோடு தேன் சேர்த்தல் போலாகும் .
மாங்கனி மாநகரம் சேலம் மாநகரத்தில் கனிந்திருக்கும் கருங்கல்பட்டியில் எண் திசையும் கட்டி ஆள்பவளாய் ஆருயிர் காக்கும் அன்னையாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் நம் குல தெய்வமாகிய கருணாம்பிகை " ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி " க்கு எழில் மிகு கம்பீரத்துடன் கூடிய ஆலயம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே .
ஆகம முறைப்படி ஹோமங்களும் , பூஜைகளும், நெய்வேத்தியமும் நித்தியம் நடைபெறுவதுடன் மக்கள் அலைகடலென திரண்டு வந்து வணங்கி அன்னையின் அருள் பெற்று உய்கின்றனர்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆலயத்தில் மேலும் சிறப்பு சேர்க்க " ஸ்ரீ சாமுண்டி வீரகுமாரர்கள் சேவை குழு " அன்னையின் கருவறை எழுப்பப்பட்ட காலத்திலேயே கருவான குழு ஆகும்.
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி திருக்கோவிலில் கும்பாபிஷேக தினத்தன்றே இக்குழுவினர் கோவிலுக்கு திருவிழாவின் பொது ஸ்ரீ சாமுண்டி அழைப்பிற்க்கு அம்மன் முகப்பு வெள்ளியால் செய்து தருவது என தீர்மானித்து மனத்தகத்தே கங்கணம் கட்டிக்கொண்டு அதன்படியே செய்து சமீபத்தில் ஆலயத்திற்கு அர்ப்பணித்துள்ளனர் .
ஸ்ரீ சாமுண்டி அழைப்பிற்கு வெள்ளியால் செய்யப்பட்ட அம்மன் முகப்பு இருப்பது சில சௌடேஸ்வரி அம்மன் ஆலயங்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது . அத்தகைய சிறப்பினை பெற்ற நமது கருங்கல்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயமும் ஒன்று.
No comments:
Post a Comment