Monday, February 17, 2014

மக்களின் கேள்விகளுக்கு அம்மன் அருளால் பதில்-வீடியோ பதிவு

மக்களின் கேள்விகளுக்கு அம்மன் அருளால் 

பதில்-வீடியோ பதிவு



கர்நாடகா மாநிலத்தின் தசாரிகாட்டா  [Dasarighatta] என்னும் சிறிய கிராமத்தில்உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் . பொது மக்களுக்கு தங்களின்குடும்பத்தை பற்றிய கேள்விகளுக்கு

அம்மன்அருளால் பதில்கள் அரிசி மாவு பரப்பப் பட்ட ஒரு பலகையில் எழுதி காண்பிக்க படுவதாகவும். எழுதக்கூடிய அம்மனின் சப்பரத்தை பிடித்து கொண்டிருக்கும் இருவருக்கும் எழுத படிக்க தெரியாது என்றும் 

 ஸ்டார் டிவியில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்டது.

அதன் வீடியோ பதிவு கீழே கொடுக்க பட்டுள்ளது. 

மேலும் நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் 16-2-2014 அன்று அங்கு சென்று பார்த்து வந்த திரு. பார்த்திபன் தீபு அவர்களின் அனுபவம்.


                                                           




கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்தூர் என்ற ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தசாரிகட்டா என்ற கிராமம்.

திப்தூரிலிருந்து தாசரிகட்டா செல்வதற்கு பஸ் கிடையாது, கார் அல்லது ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும்.

பெங்ளூரிலிருந்து பஸ் மூலம் அந்த கோவிலை அடைய மூன்று மணி நேரம் ஆனது.
                           

அங்கு கோவிலில் நாம் நமக்குண்டான கேள்விகளை கேட்க உட்காருவதற்கு

கட்டணமாக ரூ.100/- வசூலிக்கபடுகிறது. மேலும் எலும்மிச்சம்பழம் 2 வாங்கி செல்ல வேண்டும்.

நாம் பலகைக்கு எதிரில் உட்கார்ந்தவுடன். அம்மன் சப்பரமேல் முனையை நமக்கு காட்ட அதை தொட்டு கும்மிட சொல்கிறார்கள். பின் கேள்விகளை நினைத்து கொள்ள சொல்கிறார்கள்.

பின் அந்த அரிசி மாவு பரப்பபட்ட பலகையின் மேல் அந்த சப்பர நுனியை வைக்கிறார்கள்.









                          








நாம் நினைத்த கேள்விக்குண்டான பதில்கள் கன்னட எழுத்தில் வருகிறது. கன்னடம் எழுத படிக்க தெரிந்தவர்கள். படித்து கொள்ளலாம். நாம் படித்தவுடன் அதை நாம் அழித்து விட்டால் அடுத்து நாம் நினைத்திருக்கும் கேள்விக்குண்டான பதிலை எழுதி காண்பிக்க படுகிறது. எதுவும் பேசாமல் நாம் அழிக்க அழிக்க அடுத்தடுத்த கேள்விகள் எழுதி காட்டபடுகிறது.

நமக்கு கன்னட எழுத்து தெரியாததால் கன்னடம் தெரிந்த அங்கிருந்த மற்றவர்களை வைத்து அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டோம். கேள்விகளுக்கு ஆம், இல்லை என்ற பாணியில் இல்லாமல் தெளிவான நாம் கேட்கும் கேள்விக்குண்டான பதில் கிடைத்தது. ஆச்சரியமான விசயம் தான். பதில் படி சரியாக நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சில பட காட்சிகள்:-































வீடியோ பதிவு


No comments:

Post a Comment